வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் வருகை

கடந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9A எடுத்த மாணவர்களை அவர்களது பாடசாலைக்கே சென்று பாராட்டும் நோக்குடன் வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் எமது பாடசாலைக்கும் வருகை தந்தனர்.

எமது பாடசாலையில் இவ்வருடம் 43 மாணவர்கள் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி 95 வீதமானோர் க.பொ.த. உயர் தரத்தில் கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களுள் எம்.பி.எப். ஹஸ்னா எனும் மாணவி  அனைத்துப் பாடங்களிலும் ஏ தரச் சித்தி பெற்று பாடசாலைக்குப் பெருமை தேடித் தந்துள்ளார்.

எனவே, குறித்த மாணவியையும் பரீட்சையில் சித்தியெய்திய அனைத்து மாணவர்களையும் பாராட்டும் நோக்குடன் மேற்படி வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் பாடசாலைக்கு வருகை தந்தனர்.

வலயக் கல்விப் பணிப்பாளர் எம். அஹமட் லெப்பை மற்றும் வலயக் கல்வி பிரதிப் பணிப்பாளர் எம். இஸ்ஸதீன் உட்பட மற்றும் பல அதிகாரிகள் இவ்வாறு வருகை தந்தனர்.

அவர்கள், பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் அவர்களைத் தயார்படுத்திய ஆசிரியர்களுக்கும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வு, பாடசாலை அதிபர் ஏ.எம். அன்வர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.