எமது பாடசாலையில் கடந்த மூன்று வருடங்களாக சிறப்பாகச் சேவையாற்றிய முன்னாள்
அதிபர் அல்ஹாஜ் ஐ.எல். மஹ்ரூப் அவர்களுக்கான பாராட்டு விழா அண்மையில்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப்பாராட்டு விழா, பாடசாலையின் தற்போதைய அதிபர் ஏ.எம். அன்வர் மற்றும் ஆசிரியர் குழாத்தினால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழாவில் அதிதிகளாக முன்னாள் அதிபரும் தற்போதைய ஏறாவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளருமான அல்ஹாஜ் ஐ.எல். மஹ்ரூப், கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் எம். சுபைர், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஜனாப் கே.பி.எஸ். ஹமீட் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஜனாபா ஜெமிலுன் நிஸா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பாடசாலை அதிபர் ஏ.எம். அன்வர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் முன்னாள் அதிபரின் சேவையினைப் பாராட்டும் வகையிலான ஆசிரியர்களினதும் அதிதிகளினதும் உரைகள், கவிதைகள் என்பன இடம்பெற்றன.
ஏற்புரை நிகழ்த்திய முன்னாள் அதிபர் அவர்கள், தமது செயற்பாடுகளுக்கும் பணிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.
விழாவின் இறுதியில் பகற்போசன விருந்துபசார நிகழ்வும் இடம்பெற்றது.