பாடசாலை அமைவு
கிழக்கு மாகாணம். மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியின் தொன்மை வாய்ந்த கிராமங்களுள் ஒன்றான மீராவோடைக் கிராமத்தில் 1932இல் மீராவோடை அல்ஹிதாயா மகா வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டது. அலியார் போடியார் என்பவரின் முயற்சியில் களிமண்ணால் அரைச் சுவருடன் கட்டப்பட்டு இப்பாடசாலை இயங்க ஆரம்பித்தது. ஊர்ப் பிரமுகர்களின் முயற்சியில் கல், மண், சீமெந்து என்பவற்றினால் சுவர் எழுப்பப்பட்டதுடன், பின்னர் அரசாங்கத்திற்கு மனு எழுதிப்போட்டு கல்லால் பாடசாலை கட்டப்பட்டது. இதற்கான காணி அலி; போடியார் அவர்களினால் அல்லது பணிக்கர் என்பவரினால் வழங்கப்பட்டது. இதன் மேற்கேயும் கிழக்கேயும் உள்ள வீதிகள் அப்போது கை ஒழுங்கைகளாக இருந்தன.
ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் முதல் கட்டிடம் ஆரம்பப் பாடசாலை (களிமண்) இருந்த இடத்தில் அரைச் சுவர் கொண்டதாக கட்டப்பட்டது. ஆரம்ப காலத்தில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற தூர இடங்களில் இருந்து வந்தே ஆசிரியர்கள் கல்வி போதித்தனர். ஆரம்பத்தில் இப்பாடசாலையில் தமிழ் ஆசிரியர்களே முழுவதுமாக கற்பித்தலில் ஈடுபட்டனர். அதேபோன்று ஏராளமான தமிழ் மாணவர்கள் இப்பாடசாலையில் கல்வி கற்றனர்.
1940ற்குப் பிற்பட்ட காலப்பகுதி
இப்பாடசாலையின் முதலாவது அதிபராக திரு எஸ். கந்தையா குறிப்பிடப்படுகின்றார். அதன் பின் திரு. பீதாம்பரம் அதிபர் கடமையாற்றினார். பின்னர் 1938 – 1939களில் மட்டக்களப்பு முகத்துவாரத்தைத் சேர்ந்த திரு. செல்வநாயகம் தலைமை வாத்தியாராகக் கடமையாற்றினார். பாடசாலை ஆரம்பக் காலத்தின் கட்டிடத்தின் ஒரு பகுதியில் ஆண் மாணாக்கரும் மறு பகுதியில் பெண் மாணாக்கரும் கல்வி கற்றனர். முதன் முதலாக முஸ்லிம் வாத்தியாராக ஓட்டமாவடியைச் சேர்ந்த மம்மலி வாத்தியாரே கடமையாற்றினார். இந்நேரம் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றனர்.
40இற்குப் பிறகு இளைய தம்பி தலைமை வாத்தியாராக பாடசாலையைப் பொறுப்பேற்றார். இவருடன் தோப்பூரைச் சேர்ந்த முகம்மது தம்பி ஆசிரியரும் மற்றொரு முஸ்லிம் ஆசிரியரும் (திருகோணமலை) கடமையாற்றினர். இதன் பின்னர் திரு. யோசப் தலைமை வாத்தியாராகப் பொறுப்பேற்றார்.
1940ற்குப் பிறகு கல்வி முறையில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டது. காலையில் ஆண் மாணவர்கள் கல்வி கற்றனர். பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு பெண் மாணவிகள் கல்வி கற்றனர். 1945-1955 வரை சுமார் ஒரு தசாப்த காலமாக ஆண் மாணவர்களுக்கு திரு கே.ஈ. சௌந்தரராஜா தலைமை வாத்தியாராகவும், மாணவிகளுக்கு திருமதி சௌந்தரராஜா தலைமை ஆசிரியையாகவும் கடமையாற்றினர். இக்காலத்தில் மாணவர்களுக்கு மதியப் போசணமாக தனித்தனி கோப்பைகளில் கஞ்சிவகை, பால், பனிஸ், பாண், கடலை என்பன வழங்கப்பட்டன. தமிழ் மாணவர்களும் நிறையப் பேர் கல்வி கற்றனர். ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் சுமார் 300ற்குட்பட்ட மாணவர்கள் கல்வி கற்றனர். 45 – 55 வருட காலப்பகுதிகளில் எண்கணிதம், வாசிப்பு, எழுத்து என்பன போதிக்கப்பட்டன.
இக்காலப்பகுதியில் வகுப்புக்கள் 5ம் தரம் வரை வௌ;வேறாக இருந்தன. பாடசாலை 'அரசினர் முஸ்லிம் தமிழ் கலவன் பாடசாலை' எனும் பெயரிலேயே அழைக்கப்பட்டது. கொழும்பில் இருந்து வந்த பரிசோதகர்கள் பரீட்சைகளை மேற்பார்வை செய்தனர். வினாத்தாளை திருத்துவதற்கு பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டு பரீட்சைப் புள்ளிகள் மதிப்பீடு செய்யப்பட்டன.
1955ற்குப் பிற்பட்ட காலப்பகுதி
56ற்குப் பிறகு அதிகமாக முஸ்லிம் அதிபர்களே கடமையாற்றினர். 56ல் அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஒரு அதிபரும், 1957இல் காத்தான்குடியைச் சேர்ந்த ஜனாப் யூ. உதுமான் லெப்பை அதிபரும் 6 ஆசிரியர்களும் சுமார் 150 மாணவர்கள் ஆண்கள் பிரிவிலும் கல்வி கற்றனர். இப்பாடசாலையின் மாணவரும் இவ்வூரைச் சேர்ந்தவருமான ஆ.ளு. ஈஸா லெப்பை ஆசிரியராக நியமனம் பெற்று வந்தார். இவரே இவ்வூரின் முதலாவது ஆசிரியராவார். இதே ஆண்டில் யு.ஆ. கலந்தர் லெப்பை (ஏ.எம்.எஸ் முகம்மட் அதிபரின் சகோதரர்) 5ஆம் தரப்புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தார். இவரே இவ்வூரில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த முதல் மாணவராவார்.
இவரின் பின் சம்மாந்துறையைச் சேர்ந்த ஜனாப் யூ.யூ. லெப்பை பாடசாலையைப் பொறுப்பெடுத்தார். இவர் சுமார் 1960 – 1670 வரை ஒரு தசாப்தகாலமாக இப்பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றினார். பல ஊரைச் சேர்ந்த முஸ்லிம் ஆசிரியர்கள் கடமையாற்றினர். 59ற்கு முற்பட்ட காலப்பகுதியில் வாழைச்சேனை பன்சலையிலிருந்து ஒரு பௌத்த மதகுரு கால்நடையாக வந்து சிங்களம் கற்பித்தார். ஜனாப் ஜமால்தீன், ஜனாப் கமர்தீன், ஜனாப் மக்கீன், ஜனாப் ஹியாயத்துல்லாஹ் மௌலவி, திரு. ராசநாயகம் போன்றோர் 60களில் கற்பித்த ஆசிரியர்களாவர்.
1968 காலப்பகுதியில் 315 மாணவர்களும் 9 ஆசிரியர்களும் கடமை புரிந்தனர். வை. அகமதுலெப்பை 9 மாதங்கள் கடமை புரிந்தார். இக்காலப்பகுதியில் இவ்வூரைச் சேர்ந்த ஜனாப் எம்.எல். அலியார், ஜனாப் ஏ.எல் உதுமாலெப்பை, ஜனாப் கபூர் மாஸ்டர் ஆகியோரும் ஆசிரியர்களாகக் கடமை புரிந்தனர். 70 காலப்பகுதி வரை பாடசாலை மந்த கதியிலேயே இயங்கி வந்தது. பாரிய மாற்றங்கள் ஏதும் நடைபெறாவிட்டாலும் 'கற்றல், கற்பித்தல்' திருப்தியான முறையில் நடைபெற்றன.
1970ற்குப் பிற்பட்ட காலப்பகுதி (பொற்காலம்)
16.07.1970இல் ஜனாப் எம்.எம். ஆதம்லெப்பை (காத்தான்குடி) பாடசாலையைப் பொறுப்பேற்றார். இக் காலத்தை அவரது மாணவர்கள் 'பொற்காலம்' என குறிப்பிடுகின்றனர். இவர் காலத்தில் 10 ஆசிரியர்களும், ஆண்கள் பிரிவில் சுமார் 300 மாணவர்களும் கல்வி கற்றனர். 5ம் வகுப்பு வரையே ஆண்கள் பிரிவிலும் பெண்கள் பிரிவிலும் காணப்பட்டன. மரநடுகை விழா, விளையாட்டு மற்றும் போட்டி நிகழ்ச்சிகள் என்பவற்றில் மாணவர்கள் பங்கு கொண்டனர்.
இப்பாடசாலையிலிருந்து 1972இல் விளையாட்டுப் போட்டியில் உப வட்டார – வட்டார போட்டிகளில் கூடுதல் மாணவர்கள் பங்குபற்றினர். 5ம் தரம் வரை மாத்திரம் உள்ள பாடசாலை மகா வித்தியாலயங்களுடன் போட்டியிட்டு விளையாட்டில் முதல் இடத்தைப் பெற்றதால் அதிபரும் ஆசிரியர்களும் கல்வி அதிகாரியின் பாராட்டைப் பெற்றனர்.
இக்காலப் பகுதியிலும் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டிருந்தன. 1971 அரசினர் முஸ்லிம் பாடசாலை எனும் பெயருக்குப் பதிலாக 'மட்ஃமீராவோடை அல்ஹிதாயா வித்தியாலயம்' எனும் நாமம் சூட்டி மகிழ்ந்தவரும் எம்.எம் ஆதம்லெப்பை அதிபராகும். இவரிடம் கல்வி கற்ற மாணவர் ஏ.கே உதுமான் இம்மண்ணில் முதலாவது பட்டதாரியும் முதலாவது பிரதேச செயலாளரும் ஆவார்.
அதிபரின் அயராத முயற்சியின் காரணமாக 5ம் தரம் மாத்திரம் இருந்த பாடசாலையை 6ம், 7ம், 8ம் தரம் வரை உயர்த்தி அல்ஹிதாயா வித்தியாலயத்தை ஓர் 'கனிஷ்ட இடைநிலை' பாடசாலையாகத் தரம் உயர்த்தினார். இவர் காலத்தில் மாணவர் எண்ணிக்கையும் அதிகரித்தது.
1973இற்குப் பிறகு
01.06.73ல் செய்யது முகம்மது இப்பாடசாலைக்கு அதிபராகக் கடமையேற்றார். இநந்நிலையில் 10 ஆசிரியர்கள் இருந்தனர். ஆண்கள் பிரிவில் 315 மாணவர்கள் கல்வி கற்றனர். இக்காலப்பகுதியில் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகள் சுமுகமாக நடைபெற்றன. இதன் பின்னர் 23.04.1974இல் ஜனாப் ஏ.எம்.ஏ காதர் அதிபராகப் பாசாலையைப் பொறுப்பெடுத்தார். கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகள் சீராக நடைபெற்றதுடன், திட்டமிட்ட வகையில் கல்விச் சுற்றுலாக்களும் நடந்தேறின. 1976 புதிய கலைத்திட்டம் கல்விச் சீர்திருத்தம் அமுலுக்கு வந்தது.
1975க்குப் பின்பே பாடசாலையில் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன், மட்ஃமீராவோடை அரசினர் முஸ்லிம் பெண்கள் பாடசாலை அல்ஹிதாயா வித்தியாலயத்துடன் 1978.11.21இல் இணைக்கப்பட்டது.
1978 – 1984 காலப்பகுதியும் சில பின்னடைவுகளும்
1979ல் ஜனாப் ஏ.எம்.எஸ் முகம்மட் அவர்கள் இணைந்த பாடசாலையில் அதிபரானார். இந்நிலையில் சுமார் 19 ஆசிரியர்கள் கடமையாற்ற 750 மாணவர்கள் கல்வி கற்றனர். 1979ல் 9ம் வகுப்பும் 1980ல் 10ம் வகுப்பும் வைக்கப்பட்டன. இலவசப் பாடநூல்கள் பாடசாலைக்கு வழங்கப்பட்டன.
இக்காலப்பகுதியில் ஏற்பட்ட கல்வி நடவடிக்கைகளின் தளர்வினால் 1981இல் 10ம் வகுப்பு கலைக்கப்பட்டு அம்மாணவர்கள் மீண்டும் ஓட்டமாவடி மத்திய மகா வித்தியாலயத்திற்கு அனுப்பப்;பட்டனர். ஆசிரியர் தொகை 9 ஆகக் குறைக்கப்பட்டது.
பாடசாலையின் அனேக விடயங்களில் நிர்வாகச் சீர்கேடுகளும் பின்னடைவுகளும் ஏற்பட்டன. சீர்திருத்த நடவடிக்கைகள் எவையும் பயனளிக்கவில்லை. இந்நிலையில் 1984இல் 8, 9 ஆகிய வகுப்புக்கள் நீக்கப்பட்டு க.பொ.த (சாஃத) வரை இருந்த பாடசாலை 7ம் வகுப்புக்கத் தரம் குறைக்கப்பட்டது.
1985 காலப்பகுதி (புத்தெழுச்சிக் காலம்)
பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினதும் பெற்றோரினதும் தீவிர முயற்சியால் 20.02.1985இல் மட்.பிறைந்துரைச்சேனை பாடசாலையின் அதிபராக இருந்த ஏ.எல். மீராசாஹிப் அதிபராக இப்பாடசாலையைப் பொறுப்பேற்றார். கல்வி விழிப்புணர்வு மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள் பலவற்றை அவர் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டார்.
இவர் காலத்தில் பெறுமதியான நவீன மின்னியக்க உபகரணம் பாராளுமன்ற உறுப்பினர் றிஸ்வி சின்னலெப்பையின் சிபாரிசின் பெயரில் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியினால் அன்பளிப்புச் செய்யப்பட்டது. அத்துடன் இவர்கள் சிங்கர் தையல் மெசின், பைசிகில் என்பவற்றையும் வழங்கினர். முதன்முதலாக ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அனுசரணையுடன் மௌலவி அல்ஹாஜ் எல்.ரி.எம். இஸ்ஹாக் அவர்களின் முயற்சியால் இஸ்லாமியக் கலாசார ஆடையான பர்தா உடை 02.07.1986இல் வழங்கப்பட்டு மாணவிகள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒரு வருட காலப்பகுதியில் மாணவர் தொகை 963 ஆகவும் ஆசிரியர் தொகை 12 ஆகவும் அதிகரித்தது. தொண்டர் ஆசிரியர்கள் மூலம் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டது. தேசிய மட்டப் பரீட்சைகளில் மாணவர்கள் பெரிதும் முன்னேற்றம் காண்பித்ததுடன் பாடசாலைக்குப் பெருமையும் தேடித் தந்தனர்.
தேவையான வளங்கள் பலவும் பெறப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தின் கனிஷ்ட இடைநிலைப் பாடசாலைகளில் முதன்மைப் பாடசாலையாகத் தெரிவு செய்யப்பட்டதனால், 1992இல் கல்வி அமைச்சினால் புதிய 3 மாடிக் கட்டிடமும் தளபாடங்களும் வழங்கப்பட்டன.
பெற்றோரின் ஒத்துழைப்பு மைதான விஸ்தரிப்பு
1988இல் பா.அ.சங்கம், மற்றும் பெற்றோரின் பெரும் ஒத்துழைப்பினால் பாடசாலைக்கென மைதானம் ஒன்று உருவானதுடன், அதற்கான சுற்று மதிலும் அமைக்கப்பட்டது. மின்னிணைப்பு பெறப்பட்டது. விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்டது. பா.அ.சங்கம் கூட்டுறவு அறை, ஒலிபெருக்கி வசதி, மாணவர் மேடை என்பனவும் ஏற்படுத்தப்பட்டன. இவற்றிற்கு மீராஜும்மாப் பள்ளிவாயலும் உதவியது.
எந்தவித அடிப்படை வசதியும் இன்றிக் கிடந்த பாடசாலையை அரசாங்கத்தின் உதவியை விட பெற்றோரின் கூடுதல் உதவிகளாலேயே சகல வசதிகளும் கொண்ட பாடசாலையாக மாற்றியமைத்தார் அதிபர் ஏ.எல் மீராசாஹிப்.
1995இற்குப் பிறகு
1996இல் காணி சுவீகரிப்புக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. 18.06.1997ல் க.பொ.த (உஃத) வகுப்பு தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்டது. தபால் தொலைத்தொடர்பு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இதனை ஆரம்பித்து வைத்தார். 1997.12.15ல் இதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது.
01.02.1998ல் அதிபர் அஸ்ஹர் வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்றார். 01.02.1998ல் மட் மாஞ்சோலை அல்ஹிறா அதிபர் ஜனாப் எம்.எல். அலியார் இப்பாடசாலையைப் பொறுப்பெடுத்தார். இந்நிலையில் 30 ஆசிரியர்களும் 1057 மாணவர்களும் இருந்தனர். 1998 பாடசாலைகளில் கல்வியில் பா.ம கணிப்பீடு (கல்விச் சீர்திருத்தம்) சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. சாரணர் இயக்கம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சுற்று மதிலில் ஒரு பகுதி 02.11.1998ல் கட்டி முடிக்கப்பட்டது. கற்றல் கற்பித்தல் சுமுகமாக நடைபெற்றன.
இந்நிலையில் இப்பாடசாலையில் நீண்ட நாள் உப அதிபராக இருந்த ஜனாப் எம்.எஸ்.எம். இஸ்மாயீல் ஆசிரியர் பாடசாலையை பொறுப்பெடுத்தார். 12.09.1999ல் ஒன்று கூடல் மண்டபத்திற்கான அடிக்கல் தபால் தந்தி தொலைத்தொடர்புப் பிரதியமைச்சர் கௌரவ எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் நடப்பட்டது. 2001 பாடசாலைகளிடையே தரமான கல்வி உள்ளீடு வழங்கப்பட்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கிடைக்கும் வாய்ப்பு அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.
இக்காலப் பகுதியில், ஒரு சில ஆசிரியர்களின் ஒழுக்கக் குறைபாடு, மாணவிகளால் சுட்டிக் காட்டப்பட்டது. அது ஆசிரியர்களினதும் அதிபரினதும் கவனத்திற்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பே அதிகாரியால் விசாரிக்கப்படும் போதே மாணவர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்தது. உயர்தர வகுப்பில் சில மாணவர்கள் சில ஆசிரியர்களால் பிழையாக வழிநடாத்தப்பட்டனர்.
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எத்தனையோ வழிகள் இருந்தும் ஆசிரியர் சமூகமே வெட்கப்படும் விதத்தில் ஓர் இறுக்கமான சூழ்நிலை உருவானதோடு ஓர் ஆசிரியரும் தாக்குதலுக்குட்பட்டார். இது பாடசாலை வரலாற்றில் மிகவும் துரதிஷ்டவசமான ஒரு நிகழ்வாகும்.
இந்நிகழ்வின் பின் 16.07.2001ல் அதிபர் ஜனாப் எம்.எஸ்.எம். இஸ்மாயீல் இடமாற்றம் பெற்றார். இப்பாடசாலையின் உப அதிபராக இருந்த ஜனாப். ஏ. சேகுலெப்பை 16.07.2001 – 10.09.2001 வரை பாடசாலையைப் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் வேலை பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். பா.அ.சங்கமும் பெற்றார் ஆசிரியர்களும் ஒன்றுகூடி ஒரு சுமுகமான தீர்வுக்கு வந்தனர். இதனால் சில தினங்களில் பாடசாலை சுமுகமாக நடைபெறத் தொடங்கியது.
2000இற்குப் பிறகு
10.09.2001இல் ஜனாப் ஐ.எல். மஃறூப் அதிபராக இப்பாடசாலையை பொறுப்பேற்றார். இந்நிலையில் 25 ஆசிரியர்களும் 1106 மாணவர்களும் இருந்தனர். இவரும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தை அழைத்து பாடசாலையின் எதிர்காலத் திட்டங்களையும் பெற்றாரின் ஒத்துழைப்பையும் வலியுறுத்தினார். இவர் பாடசாலை அபிவிருத்தியில் ஒழுக்கம், கல்வி மற்றும் வளங்களை சேர்த்தல் எனும் மும்முனைகளில் செயற்பட்டார்.
11.03.2002இல் ஜனாப் எம்.எல்.எம். சபூர் ஆசிரியரிடம் ஆரம்பப் பிரிவு ஒப்படைக்கப்பட்டது. 2002.04.29ல் ஜனாப் எம்.பி.எம். சித்தீக் ஆசிரியரின் உதவியுடன் க.பொ.த (உஃத) வர்த்தகப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. இவர் காலப்பகுதியிலேயே இப்பாடசாலை மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டது. கல்வியில் கூடிய கவனம் செலுத்தியதோடு தொடர்ச்சியாக ஆசிரியர் மேற்பார்வையும் செய்தார்.
கல்விச் சுற்றுலாக்கள் நடைபெற்றன. அவற்றில் எல்லாம் அதிபரும் குதூகலத்துடன் கலந்து கொள்வார். இதே போல் 2003இல் முஹர்ரம் விழா, மீலாதுந்நபி விழா, தொழில்நுட்பக் கண்காட்சி, க.பொ.த.(உஃத) மாணவர்களுக்கான பிரியாவிடை எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 2002இல் 5ம் தரப்புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு 24.10.2002இல் தங்கப்பதக்கம் அணிவித்துக் கௌரவிக்கப்பட்டதுடன் ஒவ்வொருவருக்கும் தலா 1000ஃஸ்ரீ வீதம் மக்கள் வங்கியில் வைப்புப் பணமாக அன்பளிப்புச் செய்யப்பட்டது.
பாடசாலைப் பூந்தோட்டம், கல்வி மேற்பார்வை, புலமைப் பரிசில் ஊக்குவிப்பு, ஆரம்ப பிரிவிற்கான விளையாட்டுப் போட்டி எனப் பல அபிவிருத்திகளை அவர் மேற்கொண்டார். 11.07.2003ல் பாடசாலை நூலகத்திற்குரிய நூல்கள் பெறப்பட்டன. சுற்று மதில் ஒரு பகுதி அமைக்கப்பட்டது. தற்காலிக கொட்டில் அமைக்கப்பட்டது. பிளாஸ்ரிக் கதிரைகள், ஸ்பீக்கர் என்பன கொள்வனவு செய்யப்பட்டன.
அதிபர் ஜனாப் ஐ.எல். மஹ்றூப் அவர்களின் காலத்திலேயே 12 இலட்சம் ரூபா செலவில் ஆராதணை மண்டபம் துரிதமாகக் கட்டி முடிக்கப்பட்டது. 2004ல் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ஃபோட்டோக் கொப்பி இயந்திரமும் பெறப்பட்டது. 06.01.2004ல் பாடசாலைக்கென பள்ளிவாயலொன்று பரகஹதெனிய தஃவா நிலையத்தின் அனசுரணையில் நிர்மாணிக்கப்பட்டது.
இவ்வாறு அதிபர் பல வழிகளிலும் பாடசாலையின் வளர்ச்சியில் முன்னின்று உழைத்தார். இவர் காலத்தில் க.பொ.த (சாஃத) பெறுபேறு 8யு கிடைக்கப்பட்டது. அதிபர் ஐ.எல். மஹ்றூப் அவர்கள் ஓட்டமாவடி மகா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று 29.10.2004ல் அல்ஹிதாயா மாணாக்கரின் கண்ணீரலையினூடே விடைபெற்றார். 29.10.2004 – 25.01.2005 வரை பாடசாலைப் பொறுப்பைப் பிரதியதிபர் ஜனாப் ஏ.எம். அன்வர் ஆசிரியர் ஏற்று சீராக நடத்தினார்.
அவரைத் தொடர்ந்து ஜனாப் ஏ.எல். நெய்னா முஹம்மட் 25.01.2005ல் இப்பாடசாலையைப் பொறுப்பேற்றார். கல்வி, ஒழுக்கம் மற்றும் ஏனைய துறைகள் அவரின் சிறந்த வழிகாட்லில் முன்னெடுக்கப்பட்டன. இவரது காலத்தில் 02.06.2006ல. 9வது பரிசளிப்பு விழா மிகச் சிறப்பாகத் திறந்த வெளியில் கொண்டாடப்பட்டு அதிகாரிகளின் பலத்த பாராட்டைப் பெற்றது. 28.06.2005ல் இப்பாடசாலை வெளிச்ச வீடு திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டு 300,000ஃஸ்ரீ காசோலையும் பெறப்பட்டு நூல்கள், அலுமாரிகள் ஏனைய பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டன. ஆங்கில மூல கற்கை நெறி ஆரம்பிக்கப்பட்டது. 03.09.2005ல் வலயக்கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் யூ.எல்.எம். ஜெயினுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இதனைத் தொடக்கி வைத்தார். எனினும், ஆங்கில ஆசிரியர் பற்றாக் குறையினால் இது இடைநிறுத்தப்பட்டது.
17.02.2006ல் 16வது இல்ல விளையாட்டுப் போட்டியும் உடற்பயிற்சிக் கண்காட்சியும் வெகுவிமர்சையாக நடைபெற்ற போது அதில் தற்போதைய அனர்த்த நிவாரண அமைச்சர் சட்டத்தரணி அல்ஹாஜ் கௌரவ எம்.எஸ்.எஸ். அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். இதைத் தவிர வழமையான வருடா வருட மீலாதுந்நபி விழா, முஹர்ரம் விழா, முதலாம் ஆண்டு மாணவர் வரவேற்பு க.பொ.த (உஃத) மாணவர்களுக்கான பிரியாவிடை போன்ற சகல விடயங்களும் சிறப்பாக நடந்தேறின.
ஆராதனை மண்டப மேல்ப்பகுதி 2006.03.13ல் முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் எம்.எஸ்.எஸ். அமீர் அலியின் 10 இலட்சம் ரூபா ஒதுக்கீட்டில் (மஹிந்த சிந்தணையின் கீழ்) பூர்த்தியாக்கப்பட்டது. இதனைத் தவிர 2005ல் ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான பேண்ட் இசைக்கருவி புதிய ரோனியோ இயந்திரம் என்பனவும் முன்னாள் அமைச்சரினால் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
ஜனவரி 2006ல் ஆரம்பப் பிரிவுக்குப் பொறுப்பான ஜனாப் எம். மஹ்றூப் ஆசிரியரை அதிபர் நியமித்தார். இதில் 620 மாணவர்களும், 13 நிரந்தர ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களும் உள்ளடக்கப்பட்டனர். இதே ஆண்டு 10 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தனர்.
18.12.2005ல் அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதி ஒதுக்கீட்டில் 3 மலசல கூடங்களும் அமைக்கப்பட்டன. இதைத் தவிர அதிபரின் முயற்சியால் பெற்றார். நலன்விரும்பிகளின் உதவியைக் கொண்டு உள்மதில்ப் பூச்சு வேலைகள் முடிவுற்றன. 2006.11.24ல் 3 மாடி (மீராசாஹிப் கட்டிடம்) மாணவர் பாதுகாப்புக் கருதி கம்பி வேலியால் அடைக்கப்பட்டன. 2007க்கான இரவுக் காவலாலிக்கு மாதா மாதம் 5000ஃஸ்ரீ பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் வழங்கப்படுகின்றது.
இப்பற்றாக் குறையை நிவர்த்தி செய்வதற்காக பழைய கட்டிடங்கள் (〖60〗டூ'×〖20〗டூ'இ〖50〗டூ'×〖20〗டூ') இரண்டு உடைக்கப்பட்டு 3 மாடிக் கட்டிடம் (〖90〗டூ'×25') கட்டுவதற்கு அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் சட்டத்தரணி அல்ஹாஜ் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்களால் 13.10.2005ல் 70 இலட்சம் ரூபா அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் கொம்பியூட்டர் யுனிட் 31.09.2006ல் வழங்கப்பட்டு பூர்த்தியடைந்த நிலையிலுள்ளது. பாடசாலையின் பௌதீக வளர்ச்சியைப் போல் கல்வி வளர்ச்சியும் முன்னோக்கிச் செல்கின்றது.
அதிபர் ஏ.எல். நெய்னா முகம்மட் அவர்கள், பாடசாலையிலிருந்து மாற்றலாகிச் சென்ற பின், அப்போது பிரதி அதிபராக இருந்த ஈ.எல். மன்சூர் அதிபராக நியமிக்கப்பட்டார். அவரது காலத்தில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் சிறப்பாக இடம்பெற்றன. எனினும் மிகக் குறுகிய காலமே அவர் பொறுப்பிலிருந்தார்.
அவரைத் தொடர்ந்து, ஊர்ப் பொதுமக்களினதும் பள்ளிவாயலினதும் நீண்ட மற்றும் தொடர்ச்சியான வேண்டுகோளைத் தொடர்ந்து தற்போதைய அதிபரான ஐ.எல். மஃறூப் அவர்கள் அதிபராகக் கடமையேற்றார். 2010ம் வருடத்தில் பொறுப்பை ஏற்று வந்த அவர், பாடசாலையின் வளர்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு சிறப்பாகப் பணியாற்றி வருகின்றார். அவரது மூன்று வருட சேவைக் காலப்பகுதியில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் பாடசாலையின் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளிலும் வளங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆயிரம் பாடசாலைகள் திட்டத்தின் கீழ் இப்பாடசாலை தெரிவு செய்யப்பட்டமை, கணித, விஞ்ஞானப் பிரிவு உயர்தரத்தில் ஆரம்பிக்கப்பட்டமை, மஹிந்த சிந்தனையின் கீழ் புதிய இரண்டு மாடிக் கட்டடங்கள் அமைக்கப்பட்டமை, பாடசாலைக்கு இணைய வசதி பெறப்பட்டமை, கலவன் பாடசாலையாக இருந்தது ஆண்கள், பெண்கள் எனத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டமை, பிள்ளைகளுக்கு மாலைநேர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டமை, புதிய போட்டோ கொப்பி இயந்திரம் மற்றும் பெக்ஸ் இயந்திரம் என்பன பெறப்பட்டமை, சுற்று மதில்கள் பூரணப்படுத்தப்பட்டமை, புதிய நுழைவாயில் இடப்பட்டமை போன்ற பல்வேறு பௌதீக அபிவிருத்திகளுக்கு அவர் காரணமாக அமைந்தார். இவற்றுடன் எமது பாடசாலை புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரணப் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆகிய பரீட்சைகளிலும் சிறந்த பெறுபேறுகளையும் அடைவுகளையும் காண்பித்தது. புறகிருத்திய செயற்பாடுகளிலும் சிறந்த சாதனைகளைப் படைத்தது. குறிப்பாக ஆங்கில இலக்கிய நாடகப் போட்டியில் எமது பாடசாலை தேசிய மட்டம் வரை சென்று சாதனை படைத்ததில் அதிபரின் பங்கும் சிறப்பாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நாடகத்தை ஆங்கில ஆசிரியர் ஏ.எல்.எம். அனஸ் சிறப்பாகத் தயாரித்திருந்தார்.
இவ்வாறு பல சேவைகளையும் சாதனைகளையும் நிகழ்த்திய அதிபர் ஐ.எல். மஹ்ரூப் அவர்கள், ஜனவரி 2014ன் ஆரம்பத்தில், ஏறாவூர் கோட்டத்திற்கான கோட்டக் கல்விப் பணிப்பாளராகப் பதவியுயர்வு பெற்று சென்றமை பாடசாலைச் சமூகத்தைப் பெரும் கவலையில் ஆழ்த்தியது.
எனினும், அவரது காலப்பகுதியில் பிரதி அதிபராக இருந்த பல அனுபவங்களைப் பெற்றிருந்த ஆசிரியர் ஏ.எம். அன்வர் அவர்கள் பாடசாலையைப் பொறுப்பேற்று தற்போது சிறப்பாக நடத்தி வருகின்றார். ஏற்கனவே, பல சந்தர்ப்பங்களில், அவர் அதிபருடைய பொறுப்புகளையும் கடமைகளையும் செய்தவர் என்ற வகையிலும், பாடசாலை எதிர்கொண்ட பல்வேறு நெருக்கடியான நிலைகளின் போது, ஊரின் மகன் என்ற வகையில் பொறுப்புடன் செயறலாற்றியவர் என்ற வகையிலும் அவருக்கு சேவை மனப்பான்மையுடன் சிறப்பாக இயங்கி வருகின்றார். ஆசிரியர் சமூகம், பாடசாலை மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், பள்ளிவாயல் நிருவாகிகள் மற்றும் பொதுமக்கள் என எல்லோரும் அவருக்குப் பூரண ஒத்துழைப்புகளை வழங்கி வரகின்றனர்.
அண்மையில், 1000 பாடசாலைகள் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கான எல்சிடி தொலைக்காட்சி வழங்கும் நிகழ்வு, திருகோணமலை மட். விவேகானந்தா பாடசாலையில் இடம்பெற்ற போது, அதிபர் ஏ.எம். அன்வர் அவர்களும் பாடசாலையின் கணினி கற்கை நிலை முகாமையாளர் எம்.யூ.எம். ஸபீர் ஹாபிஸ் அவர்களும் சென்று அதனைப் பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், அரசாங்க சுற்று நிருபத்திற்கமைய பெற்றோர் தின நிகழ்வுகள், இப்பாடசாலையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.